ரெட்மி நிறுவனத்தின் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் ஆனது புதிய கலர் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
மற்ற வேரியண்டைவிட இந்த வேரியண்ட் ஆனது பின்புற பேனலில் electric blue gradient வடிவமைப்பை கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் Electric Blue வண்ணத்துடன் வெளிவர உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் நாளை மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

- Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6GB + 64GB மெமரி வகையின் விலை -ரூ. 14,999
- Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6GB + 128GB மெமரி வகையின் விலை – ரூ.15,999
- Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் 8GB + 128GB மெமரி வகையின் விலை – ரூ. 17,999
இந்த ஸ்மார்ட்போன் ஆனது Mi.com மற்றும் Amazon வழியாக விற்பனைக்கு வர உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI
10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும்
இது
6.53 இஞ்ச் full-HD உடன்
1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக்
கொண்டுள்ளது.
மேலும் இது octa-core MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 64-megapixel முதன்மை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இது NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.