சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்னும் இரண்டு நாட்களில் சீனாவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டும் உள்ளது. மேலும் இது, எச்டிஆர் 10 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 5ஜி ப்ராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கஸ்டம் MIUI 11 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.

பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், முன்புறத்தில் 20எம்பி, 2எம்பி டூயல் செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் / குளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது..