Mobile

அறிமுகமானது ரியல்மி X50m 5G ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் தற்போது புதிய ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

1.   6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை- இந்திய மதிப்பில் ரூ.21,500

2.   8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை- இந்திய மதிப்பில் ரூ.25,500

ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.57 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

அறிமுகமானது ரியல்மி X50m 5G ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 764ஜி எஸ்ஒசி பிராசஸர் வசதி கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மூன்றாம் நிலை சென்சார், 2எம்பி மோனோக்ரோம் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி, 2எம்பி டூயல் செல்பீ கேமரா உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4200எம்ஏச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 5 ஜி, 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் Realme X2 Pro!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள ஹானர் 20எஸ்!!

TechNews Tamil