Mobile

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது புதிய ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போனை சீனா மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினக் கொண்டதாகவும், மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 630ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி மற்றும் 8எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி கொண்டதாகவும், மேலும் 128ஜிபி மெமரி கொண்டதாகவும் உள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை  4200எம்ஏஎச் கொண்டு சக்தியுட்டுவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது  ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக இயங்குவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11,ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, புளூடூத் 5.1 என பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!

TechNews Tamil

நாளை மறுநாள் வெளியாகவுள்ள போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

உலக சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil