Mobile

அறிமுகமானது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் இன்று ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேனையும், 480nits Brightness மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதியினையும் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜிபியு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்!

மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

மார்ச் 2 வது வாரம் புதிய அப்டேட்டுடன் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்!

TechNews Tamil

ரூ. 2000 தள்ளுபடி விலையுடன் வி17 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil