Mobile

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது புதிய ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனை சீனா மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, பின்பு 480 nits பிரைட்நஸ் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 630ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 8எம்பி periscope லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32எம்பி, 8எம்பி டூயல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/ 256ஜிபி வசதி கொண்டதாக  உள்ளது, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் வசதி

கொண்டுள்ளது.  பேட்டரி அளவினைப் பொறுத்தவரை  4200எம்ஏஎச் கொண்டு சக்தியுட்டுவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது  ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக இயங்குவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11,ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, புளூடூத் 5.1 என பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

இரண்டே நாட்களில் அறிமுகமாகிறது சியோமி மி10 ப்ரோ!

TechNews Tamil

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ.7,100 ரூபாயில் அறிமுகமானது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil