சமீபத்தில் வெளியாகி ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் ரியல்மி எக்ஸ் 2 சிறந்த வரவேற்பினைப் பெற்றது. இதன் தொழில்நுட்பம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது, அத்துடன் விலையும் கணிசமான அளவில் இருக்க அதிக அளவில் விற்பனையானது.
தற்போது ரியல்மி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC கொண்டு Realme X2 மாடலை அறிமுகம் செய்யும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும், 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை பின்புற கேமராவையும் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் புதிய சிப்செட் 8nm கட்டமைப்பை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான போது, வருகிற டிசம்பர் மாதத்தில் ரியல்மி எக்ஸ்டி 730 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகும் என்று ரியல்மி தகவலை வெளிப்படுத்தியிருந்தது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 30W VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது, மேலும் இது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.