ஓப்போ நிறுவனம் தற்போது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போனை 5 ஆதரவுடன் அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஓஎஸ் 7.1 இல் இயங்குவதாக உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் 120Hz QHD + 10bit OLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் கியூஎச்டி பிளஸ் அல்ட்ரா விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்பு வசதி கொண்டதாக உள்ளது.
கேமரா அமைப்பில், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஆனது பின்புறத்தில் 48 எம்.பி முதன்மை சென்சார் கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 13 எம்.பி டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 32 எம்.பி கொண்ட கேமராவினைக் கொண்டுடுள்ளது. மேலும் 4200 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.