ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது. 5 ஜி ஆதரவுடன் வெளிவந்த ஸ்மார்ட்போன் உலகின் மற்ற நாடுகளிலும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கலர்ஓஎஸ் 7 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அனது, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமரா அளவினைப் பொறுத்தவரை இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது. இது பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஹூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இது 4,025 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.