Mobile

அசத்தல் அம்சங்களுடன் Oppo A33 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

ஓப்போ நிறுவனம் ஒப்போ A33 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த விவரங்களை  இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ33 (2020) ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் பஞ்ச்-ஹோல் கேமரா, 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ ஏ33 (2020) ஸ்மார்ட்போன் இது மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை சேமிப்பைக் கொண்டுள்ளது, மேலும்  பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கலர்ஓஎஸ் 7.2  இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

ஒப்போ ஏ33 (2020) ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் யூ.எஸ்.பி-சி போர்ட், பின்புற கைரேகை சென்சார் மற்றும் ப்ளூடூத் 5.0 கொண்டுள்ளது.

Related posts

ஜியோ அறிமுகப்படுத்தும் ஃபீச்சர் போன்!!

TechNews Tamil

அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விலைகுறைக்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil