Mobile

இரண்டு ரியர் கேமராக்களுடன் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒப்போ நிறுவனம் தற்போது  ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 720 x 1,520 பிக்சல்கள் தீர்மானம் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் விலை- இந்திய மதிப்பில் ரூ.12,300

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ஒப்போ ஏ12 ஸ்மார்டபோன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இரண்டு ரியர் கேமராக்களுடன் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை ஒப்போ ஏ12 ஸமார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் 4320எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரியல் மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கான விலை நிர்ணயம்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது விவோ நிறுவனத்தின் ஒய்52எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

மலேசியாவில் களம் இறங்கிய இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil