ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக தனது ஒன்பிளஸ் டிவியினை அறிமுகம் செய்தது, அதனுடன் கூடுதலாக ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இதன் முந்தைய சீரியசைவிட பல சிறப்பான அம்சங்களை கொண்டதாக இது உள்ளது.
- 128 ஜி.பி. மாடல் விலை – ரூ. 37,999
- 256 ஜி.பி. விலை – ரூ. 39,999
இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் FHD+ ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த போனில் 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆகியவையும் அடக்கம், மேலும் இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டு இயங்குகிறது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. டெலிஃபோட்டோ போன்றவற்றையும் கொண்டுள்ளது.
முன்புறத்தில் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி கேமரா உள்ளது. மேலும் இதில் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.