நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆனது 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் Unisoc பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

இந்த நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 5எம்பி ரியர் கேமராவினையும் மற்றும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
மேலும் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் 2800எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் 4 ஜி, புளூடூத் 4.2 வைஃபை 802.11 பி/ஜி / என், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.