நோக்கியா நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த டிவியானது ப்ளிப்கார்ட்டிடன் இணைந்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விலை – ரூ. 41,999
இந்த ஆண்ட்ராய்டு டிவி டிசம்பர் 10 முதல் நோக்கியா இயங்குதளத்தில் இன்றுமுதல் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த டிவியானது 55 இன்ச் உடன் 4 கே யுஎச்.டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 3840×2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 2.25 ஜி.பி. ரேம் மற்றும் மெமரியினைப் பொறுத்தவரையில் 16 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 இயங்குதளம் கொண்டுள்ளது.
மேலும் இது, டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட் ஒலி மற்றும் டால்பி விஷன் தொழில்நுட்பம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த டிவியானது வைபை, ப்ளூடூத், ஹெச்.டி.எம்.ஐ., யு.எஸ்.பி., ஈத்தர்நெட் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.