Mobile

அறிமுகமானது நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 150 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த நோக்கியா 150  ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவினைப் பொறுத்தவரை 2.4 இன்ச் 240×320 பிக்சல் QVGA டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் மீடியாடெக் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும்  நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ் இயங்குதளத்தினால் இயங்குவதாகவும் உள்ளது.

மேலும் 4 எம்பி இன்டெர்னல் மெமரி வசதி கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை விஜிஏ கேமரா, ஃபிளாஷ் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் கூடுதல் ஆதரவாக விஜிஏ கேமரா, ஃபிளாஷ், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஏவி கனெக்டர் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 1020 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன் ரெட், சியான் மற்றும் பிளாக் நிறங்களினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

2 மணி நேரத்தில் மொத்த விற்பனையும் ஒவர்..

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வியட்நாமில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் Vivo Y19!

TechNews Tamil