Mobile

அறிமுகமானது நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன்!!!

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் கடந்த மாதம் நடந்த ஐ.எஃப்.ஏ. நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

  1. நோக்கியா ஃபீச்சர் போனின் விலை – ரூ. 1,599

நோக்கியா ஃபீச்சர் போன் அதன் விற்பனையை அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஃபீச்சர் போன்  1.77 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது மேலும் இது  SPRD 6531E பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன்!!!

4 எம்.பி. ரேம், 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

இது 30 பிளஸ் மென்பொருள் கொண்டு இயங்கும்தன்மையானது, மேலும் இது பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ வசதியினைக் கொண்டுள்ளது.

இது எம்.பி.3 பிளேயர், ஸ்னேக் கேம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

இந்த ஃபீச்சர் போன் SPRD 6531E பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

சிங்கில் மற்றும் டூயல் சிம் என்று இரண்டு வகைகளிலும் வெளிவருகிறது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யு.எஸ்.பி. 2.0 கொண்டுள்ளது.

Related posts

ஜியோனி வெளியிட்டுள்ள ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நோக்கியா பேசிக் மாடலிலும் இனி ஆண்ட்ராய்டு வசதி…

TechNews Tamil

இனி ஓப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் ரூ.23,990 மட்டுமே!!!

TechNews Tamil