நாய்ஸ் நிறுவனமானது தற்போது இந்தியாவில் நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸினை அறிமுகம் செய்துள்ளது.
நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ விலை – இந்திய மதிப்பில் ரூ. 4999
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதால், விற்பனையானது தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் 5, குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏஏசி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது. கூடுதலாக ஐபிஎக்ஸ்7 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 2200 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இது ரிவர்ஸ் சார்ஜிங்க் வசதிகளுடன், 8 மணி நேரம் பிளேபேக் கொண்டும் உள்ளது.
இதில் 6எம்எம் கிராஃபீன் ஸ்பீக்கர் டிரைவர்கள், குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏஏசி போன்றவையும் உள்ளது, மேலும் இந்த இயர் பட்ஸில் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள் உள்ளன.
மேலும் சிறப்பம்சமாக கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டுள்ளது.