Mobile

அறிமுகமானது மோட்டோரோலா ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் FHD+ IPS LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2300×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

 மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU வசதி கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது. மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது மோட்டோரோலா  ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா,  16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா,  2 எம்.பி. மேக்ரோ சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், 16 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. இது 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி உள்ளது. மேலும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் ஆஃபர்!

TechNews Tamil

தள்ளுபடி விலையில் விற்பனையாகும் சாம்சங்க் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 6,299 விலையில் அறிமுகமான லாவா இசட்71 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil