மோட்டோரோலா நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
- மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.28,600
இந்த ஸ்மார்ட்போன் 6.5′ இன்ச் எல்சிடி உடனான முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது.
மேலும் இது 128ஜிபி உள்ளடக்க மெமரியினையும் கொண்டுள்ளது, மேலும் இது எஸ்.டி கார்டு மூலம் 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்டு நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா, 32 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது 4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.