Mobile

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோரோலா ஒன் ஃபியூஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1600×720 பிக்சல் தீர்மானத்துடன் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 616 GPU வசதி கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை  4 ஜிபி LPPDDR4x ரேம்,  64 ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில்  48 எம்பி பிரைமரி கேமரா,  8 எம்பி 118° வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வசதி கொண்டுள்ளது.

முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இது 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,  ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி கொண்டதாக உள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

களமிறங்க காத்திருக்கும் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நேற்று விற்பனையைத் துவக்கியுள்ள Realme 5s!

TechNews Tamil

Black Friday ஆஃபரில் விற்பனைக்கு வந்த Realme X2 Pro !

TechNews Tamil