மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1080பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதிக் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது.