Apps

கண்காணிப்பு வசதிகளுடன் சிறுவர்களுக்கான மெசஞ்சர் ஆப் அறிமுகம்!!

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையினை ஸ்மார்ட்போன் வைத்துள்ள யாரும் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.

சாதாரண chat களை பண்ண விரும்பும் பயனர்கள் பொதுவாக இந்த மெசஞ்சர் சேவையின் மூலமே அனுப்ப முடியும் என்பதால், இந்த சேவையினை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள மெசஞ்சர் சேவையானது, சமீபத்தில் டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் மெசஞ்சர் ஆனது கிட்ஸ் செயலியினை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த மெசஞ்சர் கிட்ஸ் செயலியானது ஏற்கனவே உள்ள செயலியினைவிட மேம்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த செயலியில் புதிய நபர்களை சேர்த்தல், குழுக்களில் இணைதல் மற்றும் ப்ரோஃபைல் குறித்த தகவல்கள் போன்றவற்றினை பெற்றோர்கள் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

கண்காணிப்பு வசதிகளுடன் சிறுவர்களுக்கான மெசஞ்சர் ஆப் அறிமுகம்!!

பழைய செயலியில் இருந்த ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் வசதி தற்போது மேம்பட்ட அம்சங்களுடன், சூப்பர்வைஸ்டு ஃப்ரெண்டிங் எனும் அம்சமாக வழங்கவுள்ளது.

சிறுவர்களின் அக்கௌண்ட் குறித்த தகவல்கள் பெற்றோருக்கு நோட்டிஃபிகேஷனாக அனுப்பப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள இந்த மெசஞ்சர் கிட்ஸ் செயலிக்கு புதிய அப்டேட் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 70 நாடுகளில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Related posts

ஏர்டெல் 3ஜி சேவை இனி கிடையாது!

TechNews Tamil

இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியினை சம்பாதித்துள்ள மித்ரன் செயலி!!

TechNews Tamil

1 நிமிசத்துல ஈசியா பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ஒன்பிளஸ் பே!!

TechNews Tamil