ஹானர் பிராண்டின் மேஜிக்புக் 14, மேஜிக்புக் 15 மற்றும் மேஜிக்புக் ப்ரோ லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹானர் மேஜிக்புக் குறித்த சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
ஹானர் பிராண்டின் மேஜிக்புக் 14 இன்ச் 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 3.0GHz ஏஎம்டி ரைசன் 7 4800H மொபைல் பிராசஸர் கொண்டதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 16 ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி கொண்டதாக உள்ளது.

மேலும் இது விண்டோஸ் 10 கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் பட்டன், பாப்-அப் வெப்கேமரா, மேஜிக்லிண்க் 2.0, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0 கொண்டதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப்-சி x 1, ஹெச்டிஎம்ஐ x 1, யுஎஸ்பி3.0 (டைப் ஏ) x 1, யுஎஸ்பி2.0 (டைப் ஏ) x 1, மேலும் மேஜிக்புக் 14 லேப்டாப் 56Wh பேட்டரி கொண்டதாக உள்ளது.