Gadgets

மேம்பட்ட அம்சங்களுடன் மேக்புக் ஏர் அறிமுகம்!!

ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் சாதனத்தை அப்டேட் செய்து இருக்கிறது.பழைய மேக்புக் ஏர் மாடலைவிட இந்த மேஜிக் கீபோர்டானது இருமடங்கு அதிக மெமரி கொண்டதாக உள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் ஐ3, 256 ஜி.பி. மெமரி கொண்ட வகையின் விலை- ரூ. 92,990

ஆப்பிள் மேக்புக் ஏர் ஐ5, 512 ஜி.பி. மெமரி கொண்ட வகையின் விலை- 96,510

இந்த ஆப்பிள் மேக்புக் ஏர் 2020 குறித்த  சிறப்பம்சங்களை நாம் இப்போது பார்க்கலாம். இந்த மேக்புக்கானது 13.3 இன்ச் 2560×1600 பிக்சல் 227 PPI ரெட்டினா டிஸ்ப்ளே ட்ரூ டோன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இது 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் மற்றும் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேம்பட்ட அம்சங்களுடன் மேக்புக் ஏர் அறிமுகம்!!

மேலும் இந்த மேக்புக் ஆனது  இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் வசதி கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த மேக்புக் 8 ஜி.பி. 3733MHz ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி வசதி கொண்டுள்ளது.

இது  மேக் ஒ.எஸ். கேட்டலினா, மேஜிக் கீபோர்டு, டச் ஐ.டி., ஃபோர்ஸ் டச் டிராக்பேட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த மேக்புக் ஆனது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைடு ஸ்டீரியோ சவுண்ட், டால்பி அட்மாஸ் பிளேபேக், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்,  2x தண்டர்போல்ட் 3 போர்ட்கள், டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. 3.1, வைபை 802.11ac டூயல் பேண்ட், ப்ளூடூத் 5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது. பேட்டரியினைப் பொறுத்தவரை 49.9 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

ஜூன் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

சியோமி மீ கேமிங்க் லாப்டாப் 4 ஆம் தேதி வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ளது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட்!

TechNews Tamil