Mobile

அறிமுகமானது எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன்!!

எல்ஜி நிறுவனம் தற்போது புதிய எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் 1080 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

அறிமுகமானது எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்; மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஐபோன் எஸ்.இ. 2 இன் அசத்தலான அம்சங்கள்!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் Oppo A8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil