லெனோவோ நிறுவனம் தின்க்ஸ்மார்ட் வியூ என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய டிஸ்பிளேவானது 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்டதாக உள்ளது. இன்டகிரேட்டெட் கேமரா மைக்ரோபோன் மற்றும் ஸ்பிக்கர்கள் கொண்டுள்ளது.
மேலும் இது 5எம்பி வைடு ஆங்கிள் கேமரா, பிரைவசி ஷட்டர், டூயல் மைக்ரோபோன் அரே, 1.75-இன்ச் வாட் ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த தின்க் ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளேவில் குவால்காம் ஏ.பி.கியூ.8053 சிஸ்டம் ஆன சிப் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ப்ளூடூத் ஹெட்செட்களுடன் பயன்படுத்த ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் வசதியும் 8ஜிபி மெமரி வசதி கிடைக்கும்.
மேலும் இந்த தின்க்ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளே மூலம் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்களுக்கான ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யலாம்.
இது கூகுளின் ஹோம் ஏ.ஐ தொழில்நுட்பத்தினை சார்ந்து வெளியாகாமல், அதற்கு பதிலாக மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவை கொண்டு இயங்குவதாக உள்ளது.