Gadgets

அறிமுகமானது லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்!!

லெனோவா நிறுவனம் தற்போது புதிய லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 என்ற லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்பின் விற்பனையும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்

1.      14-இன்ச் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்

2.      15-இன்ச் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்

என இரண்டு அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளது.

அறிமுகமானது லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்!!

மேலும் இந்த லேப்டாப் க்யூ-கண்ட்ரோல் தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது. லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப் 10 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகள் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த லேப்டாப் எஸ்.எஸ்.டி மற்றும் எச்.டி.டி சேமிப்பு விருப்பத்தினைக் கொண்டதாகவும்,

இரண்டு புறமும் குறுகிய பெசல்கள் கொண்டுள்ளன. மேலும் சிறப்பான ஒலியினை வழங்கும் பொருட்டு டால்பி ஆடியோ வீடியோ, ஸ்ட்ரீமிங் இசை கொண்டுள்ளது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப் வெப்கேம் தனியுரிமை ஷட்டர் கொண்டதாக உள்ளது. பட்டனில் உள்ள கைரேகை ரீடர் வசதி பெரும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, இரண்டு யூ.எஸ்.பி 3.1 போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

மலிவான விலையில் 4 புதிய Mi டிவிக்கள் அறிமுகம்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் Oraimo ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்!

TechNews Tamil

ரூ.1100 விலையில் அடடா எனக்கூற வைக்கும் அம்சங்களுடன் ரெட்மி பேண்ட் அறிமுகம்!!

TechNews Tamil