லெனோவா நிறுவனம் தனது லெனோவா குரோம்புக் 3 லேப்டாப்பை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. விற்பனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த லேப்டாப் வெகு விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
லெனோவா குரோம்புக் 3 லேப்டாப் 11 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், 250nits பிரைட்நஸ் வசதி கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த லேப்டாப் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. லெனோவா குரோம்புக் 3 லேப்டாப் இன்டெல் Celeron N4020 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது, 1.10 ஜிகாஹெர்ட்ஸ், 2.80 ஜிகாஹெர்ட்ஸ், கொண்டு செயல்படுவதாக உள்ளது. இந்த லேப்டாப் குரோம்புக் ஒஎஸ் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
மேலும் இந்த லேப்டாப் முன்புறத்தில் 720p வெப்கேம் கொண்டதாகவும், 42Wh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரண்டு யூ.எஸ்.பி-சி போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி-ஏ போர்ட்கள் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ரீடர்,
ஆடியோ ஜாக், வைஃபை மற்றும் புளூடூத் 4.2 போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2வாட் ஸ்பீக்கர்களைக் கொண்டதாகவும் உள்ளது