Mobile

அறிமுகமானது மேம்பட்ட அம்சங்களுடன் லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன்!!

லெனோவா நிறுவனம் தற்போது லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விலை விவரங்கள் தற்போது வெளியாகவில்லை.

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் ஆனது 6.07-இன்ச் வாட்டர்டிராப் டிஸ்பிளேவினையும், இது 720 x 1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc எஸ்சி9863ஏ பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

அறிமுகமானது மேம்பட்ட அம்சங்களுடன் லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி மெமரி மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி செகன்டரி சென்சார் போன்ற இரண்டு கேமராக்களைக் கொண்ட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட விவோ Z5!

TechNews Tamil

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil