எதிர்பார்க்கப்பட்டபடியே ஹூவாய் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான Harmony Os-ஐ நேற்று அறிமுகம் செய்தது.
ஹூவாய் நிறுவனத்தின் சொந்த ஓஎஸ் ஆன ஹார்மனி ஆனது அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஹூவாய் போன்கள் இனி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தக்கூடாது என்கிற அமெரிக்காவின் தடையைத் தொடர்ந்து, ஹார்மனி ஓஎஸ்-ன் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.
தெற்கு சீனாவின் டோங்குவானில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் ஹூவாய் அதன் புதிய இயங்குதளத்தை அறிவித்தது.

அறிமுகத்தின் போது, “ஹார்மனி ஓஎஸ் என்பது இலகுரக, சக்திவாய்ந்த செயல்பாட்டைக் கொண்ட சிறிய இயக்க முறைமையாகும், மேலும் இது முதலில் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட் ஸ்கிரீன்கள், இன்-வெயிக்கில் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும்” என்று ஹூவாய் கூறியுள்ளது.
ஆக, மாநாட்டின் இரண்டாம் தினமான இன்று, நிறுவனத்தின் முதல் ஹார்மனி தயாரிப்பாக, Honor Vision smart screen களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் வெளியான தகவலின்படி, நிறுவனத்தின் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் ஆன ஹூவாய் Mate 30 Lite-ல் புதிய இயங்குதளமான Harmony OS இடம்பெறலாம். அம்சங்களை பொறுத்தவரை, ஹூவாய் மேட் 30 லைட் ஆனது, 6.26 இன்ச் அளவிலான பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்பை கொண்டிருக்கலாம்.
கேமரா அமைப்பை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை கேமராவை கொண்டிருக்கலாம்.