Mobile

அறிமுகமானது அட்டகாசமான அம்சங்களுடன் ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன்!

ஹூவாய் நிறுவனம் ஜோர்டானில் ஹூவாய் Y8s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினையும், 2340 X 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது அட்டகாசமான அம்சங்களுடன் ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி மெயின் கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 8எம்பி, 2எம்பி டூயல் செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஹைசிலிகான் கிரிண் 710சிப்செட் வசதி கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 9.1 வசதி கொண்டும் உள்ளது. மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ், 3.5 மிமீ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

மத்திய கிழக்கில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்!!

TechNews Tamil

அறிமுகமானது மடங்கக்கூடிய Samsung Galaxy Fold !!

TechNews Tamil

ரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை!! சோகத்தில் ஐபோன் விரும்பிகள்!!

TechNews Tamil