Gadgets

வீடியோ அழைப்புகளுக்கான திறன் கொண்ட Huawei Smart Screen V55i TV அறிமுகம்!

ஹுவாயின் புதிய Huawei Smart Screen V55i டிவி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவி குறித்த விவரங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

1.    Huawei Smart Screen V55i டிவியின் விலை – (இந்திய மதிப்பில்) சுமார் ரூ.41,000

இந்த டிவியானது 55 அங்குல 4 கே எல்சிடி டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது. இந்த டிவி ஹொங்கு குவாட் கோர் ஸ்மார்ட் சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த டிவி இரண்டு கார்டெக்ஸ்-ஏ 73 கோர்கள் மற்றும் இரண்டு கோர்டெக்ஸ்-ஏ 53 கோர்களினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது மாலி-ஜி 51 ஜி.பீ.யு வினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த டிவியானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இந்த டிவியில் லோ-லைட் பாப்-அப் கேமரா வசதியினைக் கொண்டுள்ளது. 1080p எச்டி வீடியோ அழைப்புகளினை மேற்கொள்ள முடியும்.

V55i, ஸ்மார்ட் ஆடியோ சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டதாகவும், 2.4L பெரிய ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் குரல் கட்டுப்பாட்டு அம்சம் கொண்டுள்ளது.

AI ஃபிட்னஸ் 2.0 செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த டிவியானது ஸ்மார்ட் க்ராஸ் திரை அம்சமும் உள்ளது. இது நான்கு 10W ஸ்பீக்கர்கள் மற்றும் நான்கு 2W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.

இந்த டிவியானது எச்.டி.எம்.ஐ 2.0, 3-இன் -1 ஏ.வி, டி.டி.எம்.பி மற்றும் யூ.எஸ்.பி 3.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

உடற்பயிற்சி செய்வோருக்கான iVoomi FitMe ஃபிட்னஸ் பேண்ட்!

TechNews Tamil

தாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியுள்ள லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்!

TechNews Tamil