ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் இன்று வெளியாகியுள்ளது, இந்த ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவினையும் 2440*1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் இது வாட்டர் டிராப் நாட்ச் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சமாக கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இந்த ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் கிரின் 710 எஃப் ஆக்டோ கோர் செயலி கொண்டதாகவும் மற்றும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க வசதி கொண்டதாகவும் உள்ளது.
மேலும் ஹூவாய் என்ஜாய் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது, ஹூவாய் என்ஜாய் 10 எஸ் EMUI 10 வசதியுடன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில், 48 மெகாபிக்சல் மெயின் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள் போன்றவற்றினையும், முன்புறத்தில், 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமராவினையும் வாட்டர் டிராப் வசதியினையும் கொண்டுள்ளது.