Mobile

அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ஹூவாய் நிறுவனத்தின் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 800 எஸ்ஓசி கொண்டதாக உள்ளது.

மேலும் இது வாட்டர் டிராப் ஸ்டைன் டிஸ்ப்ளே நாட்ச் வசதி கொண்டதாகவும் உள்ளது. ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வசதியினைக் கொண்டு இரண்டு வகைகளில் வருகிறது.

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் முன்பதிவானது தொடக்கப்பட்டுள்ள நிலையில், இது ஜூன் 24 ஆம் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்டு EMUI 10.1 இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இது 6.5 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், 1080*2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா போன்றவற்றினைக் கொண்டு உள்ளது.

முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

மேலும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியும் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு நீட்டிக்கக் கூடிய வசதியும் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி ஆதரவோடு, 4 ஜி வோல்ட் இ, வைபை, டைப் சி போர்டல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகமான நோக்கியா 2.3!

TechNews Tamil