Mobile

அறிமுகமானது ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

 ஹுவாய் நிறுவனம் ஜப்பானில் நோவா லைட் 3 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன், 6.40 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் உடன் கூடிய 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் கிரின் 710 எஃப் SoC கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை, இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மேலும் கூடுதலாக உள்ளடக்க மெமரி வசதியினையும், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் சேவையினையும் கொண்டுள்ளது.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இணக்கத்துடன் கூடிய EMUI 9.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் 3,400mAh பேட்டரி ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரினைக் கொண்டுள்ளது.

நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில், 13 மெகா பிக்சல் கொண்ட ஒரு பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமராவினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் V4.2, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், என்எப்சி மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது அசத்தலான ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இன்று விற்பனைக்கு வந்த Redmi Note 8!

TechNews Tamil

அறிமுகமானது Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil