மலேசியாவில் ஹூவாய் நிறுவனம் தற்போது நோவா 7ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஐபோன் மாடல்களைப் போன்று பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளதால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் விலை- ரூ.18,900
அதாவது ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது. மேலும் இது சிங்கிள் பன்ச்-ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹைசிலிகான் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி3 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.