Mobile

அறிமுகமானது ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன்!!

ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன்  ஆனது மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

1.   ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் விலை – (இந்திய மதிப்பில்) 18,900

ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.53 இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் பன்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் 4200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

தள்ளுபடி விலையில் விற்பனையாகும் சாம்சங்க் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள சியோமியின் 100MP கேமிரா ஸ்மார்ட்போன்

TechNews Tamil

அறிமுகமானது விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil