Mobile

அறிமுகமாகிறது ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ!!

ஹூவாய் நிறுவனம் ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோவின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. 

ஹூவாய் நிறுவனம் அதன் மேட் 30 தொடர் ஸ்மார்ட்போன்களை வருகிற செப்டம்பர் 19 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹூவாய் மேட் 30 சீரிஸ் ஆனது Huawei HiSilicon Kirin 990 SoC கொண்டு இயக்கப்படும் என்று தெரிகிறது. கிஸ்சீனாவின் ஒரு அறிக்கையின்படி, இதன் கிரின் 990 SoC ஆனது EUV 7 nm கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

அறிமுகமாகிறது ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ!!

மேலும் இந்த மேட் 30 சீரிஸ் ஆனது 5ஜி மோடம், ஹைசிலிகான் பலோங் 5000 5ஜி மோடத்துடன் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை போலவே, எல்லா ஹவாய் மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் 5ஜி மோடமுடன் வருமா அல்லது மேட் 30 தொடரின் கீழ் ஒரு சிறப்பு 5ஜி மாறுபாடு வெளியாகுமா என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை. 

ஹூவாய் மேட் 30 ப்ரோ ஆனது 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும், 90 ஹெர்ட்ஸ் Refresh Rate விகித்ததையும் கொண்டுள்ளது.

இது 40 எம்பி அளவிலான முதன்மை கேமராவை கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். மேலும் இது 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் 50 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் வரை வழங்கும் என்றும் தெரிகிறது. 


இந்த ஸ்மார்ட்போன் ஒரு 4,200 mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது, மேலும் இது 55 W ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டருடன் வரும் என்றும் தெரிகிறது. 


Related posts

அதிரடியாக அறிமுகமானது Vivo Z1x ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

கொரோனா அச்சுறுத்தல்: ஆப்பிள் ஐபோன் எடுத்த அதிரடி முடிவுகள்!!

TechNews Tamil