Mobile

அறிமுகமானது ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 7.09 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி மெயின் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக்6873 மற்றும் Dimensity 800எஸ்ஒசி ஆதரவு கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி  கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 ஏசி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 5, பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இந்தோனேசியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15 Holiday எடிஷன் அறிமுகம்!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil