Mobile

அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் ஆகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 19 ஆம் தேதி பொங்கலை ஒட்டி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  1. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.13,999
  2. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.16,999
அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது..

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது, முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

எச்டி வசதியினைப் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் சீனாவில் ரியல்மி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

அறிமுகமானது விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல்!

TechNews Tamil