ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.59 இன்ச் FHD பிளஸ் நோ-நாட்ச் எல்சிடி டிஸ்ப்ளேவினையும், 2340×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் கிரின் 810 பிராசஸர் வசதி கொண்டதாகவும், ARM மாலி MP6 GPU வசதி கொண்டும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பை சார்ந்த EMUI 9.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16 எம்பி பாப் அப் செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது, பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.