ஹானர் நிறுவனம் ஹானர் 9 எக்ஸ் லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
1. Honor 9X Lite-ன் 4 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,400)
இந்த ஹானர் 9 எக்ஸ் லைட் மே 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் ஆனது, EMUI 9 உடன் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது 6.5 இன்ச் உடன் 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் கிரின் 710 SoC கொண்டு இயங்குகிறது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை இது, பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கொண்டுள்ளது.
ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட் போன் 3,750 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.