Mobile

அறிமுகமானது ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன்!!

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி லென்ஸ், 5 எம்பி அல்ட்ரா லென்ஸ் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்  போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil