Mobile

அறிமுகமானது அசர வைக்கும் அம்சங்களுடன் Honor 8A 2020!!

ஹானர் நிறுவனம் தற்போது அதன் 8ஏ 2020 ஸ்மார்ட் போன் தற்போது ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது.

  1. ஹானர் 8 ஏ 2020 ஸ்மார்ட் போனின் 64 ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.10,800
  2. ஹானர் 8 ஏ 2020 ஸ்மார்ட் போனின் 32 ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.8000

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.09 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 720 × 1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியே பி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது அசர வைக்கும் அம்சங்களுடன் Honor 8A 2020!!

இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி கேமராவினையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இது 3020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தலாக அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8!!

TechNews Tamil

தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ளது எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil