ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ25,740
இந்த ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் இது 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிறப்பான சிப்செட் வசதி கொண்டதாகவும், 7என்எம் கிரிண் 820 பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-ஜி57எம்பி6 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரியினை நீட்டிக்கும் ஆதரவினைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 6எம்பி செல்பீ கேமராவை முன்புறத்திலும், பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற அமைப்பினைக் கொண்டதாகவும் உள்ளது.
முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ac (2.4GHz / 5GHz), புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.