Mobile

அறிமுகமானது ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தற்போது நாம் பார்க்கலாம்.

  1. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை -(இந்திய மதிப்பில்) ரூ.43,200
  2. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை -(இந்திய மதிப்பில்) ரூ.47,600

ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போன் 6.57-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினயும், 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரிண் 990 5ஜி பிராசஸர் உடன் ஏஆர்எம்-ஜி76எம்பி ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 40எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி +8எம்பி  என்ற டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

விவோ நிறுவனத்தின் விவோ Y15 ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

அக்டோபர் 17ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஓப்போ கே5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil