வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதியன்று சீனாவில் அதிகாரப்பூர்வமான அறிமுகத்தை நோக்கி உள்ள ஹானர் 20எஸ் ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,999 க்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் 20எஸ் ஆனது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு விருப்பத்திலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் 6.26 இன்ச் ஃபுல்-எச்டி+ (1080×2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 2.6GHz ஆக்டா கோர் SoC, 12 ஜிபி வரை ரேம், 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு பை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பும், அதில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை கேமரா போன்றவைகளும் உள்ளதாகத் தெரிகிறது.
ஹானர் 20எஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் அளவிலான கேமரா காணப்பட்டது.
அளவீட்டில், இது 154.25×73.97×7.87 மிமீ மற்றும் 172 கிராம் எடையும் கொண்டிருந்தது. இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங் 3,650 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதாகத் தெரிகிறது.