Gadgets

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அறிமுகமான ஜிபிஎஸ் வாட்ச்!!!

இன்றைய காலக்கட்டத்தில் ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்கள் வாடிக்கையாகி வருகின்றன.


குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பல கேட்ஜெட்ஸ் ஆன்லைனிலும், வெளிக்கடைகளிலும் கிடைக்கிறது. ஜி.பி.எஸ் வாட்ச், ஜி.பி.எஸ் கீ செயின், ஜி.பி.எஸ் கருவிகள் என இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அறிமுகமான ஜிபிஎஸ் வாட்ச்!!!

பல வண்ணங்களில் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஜி.பி.எஸ்வாட்ச் உள்ளது. இது ஆயிரம் ரூபாயிலிருந்து, தரத்துக்கு ஏற்றவாறு 2,000 மற்றும் 5,000 ரூபாய் வரையில் கிடைக்கிறது. நல்ல தரமான வாட்ச் 2,500 ரூபாயில் கூட பெற முடியும். இதில் ஏற்கனவே ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும். 

இந்த வாட்ச்சை பெற்றோர்கள் தங்களது கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் ஆப் உடன் இணைத்துக் கொள்ளலாம். வாட்ச்சை குழந்தைகளின் கையில் கட்டிவிட வேண்டும். இப்போது குழந்தை எங்கு சென்றாலும், வீட்டில் இருந்தபடி பெற்றோர்கள் ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளலாம். 

இதே போல், குறிப்பிட்ட பரப்பளவு எல்லை தாண்டி சென்றால் போனில் அலாரம் அடிக்கும் வகையில், எல்லை அளவை செட் செய்து கொள்ளலாம். மேலும், ஆபத்து ஏதும் வந்தால், குழந்தை வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் போனில் எச்சரிக்கை செய்தி வந்துவிடும். 

Related posts

இந்தியாவில் அறிமுகமானது அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்!!

TechNews Tamil

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil

இதயத் துடிப்பை உணரவைக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

TechNews Tamil