வாட்ஸ்அப் பேஸ்புக்கினை அடுத்து அதிகப் பயனர்களைக் கொண்டதாகவும் உள்ளது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பது மிகவும் குறைவே ஆகும்.
மெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.
தற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த வாட்ஸ் ஆப்பிற்குப் போட்டியாக கூகிள் நிறுவனம் புதிதாக Google Messages என்ற புதிய ஸ்மார்ட்போன் செயலியினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த Google Messages App செயலியானது, வாட்ஸ்அப் செயலி போன்றே பல சிறப்புமிக்க அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. கூகிளின் இந்த செயலியால் வாட்ஸ்அப் அதன் பயனர்களை இழக்கலாம் என்றும், வெகுவிரைவில் வாட்ஸ் ஆப் இடத்தினை இது பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவைக்கு RCS என்னும் Rich Communication Services பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது மல்டிமீடியா மெசேஜ், எச்.டி புகைப்படங்கள், வீடியோக்கள், GIF-கள் மற்றும் தேவையான டாக்குமெண்ட் பைல்கள் போன்றவற்றினை அனுப்ப உதவுகிறது.
இந்த செயலியானது தற்போது பிரான்ஸ், மெக்ஸிகோ, பிரிட்டன், இத்தாலி மற்றும் சிங்கப்பூரில் பயன்பாட்டில் உள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் விரைவில் அணுகக் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.