கூகுள் மீட் செயலியினை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஜூம் செயலிபோலவே பயன்படுத்திக் கொள்ள முடியும். மே மாதம் முதல் அனைத்துப் பயனர்களுக்கும் Google Meet பயன்பாட்டுக்கு இலவசமாக வந்துள்ளது.
அதேபோல் கூகுள் நிறுவனத்தின் மற்றொரு செயலியான கூகுள் டுயோ மூலம் வீடியோ கால்கள் பயன்பாட்டினை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் டுயோ குறித்த ஒரு சிறப்புமிக்க அம்சம் தற்போது வெளியாகியுள்ளது, அதாவது இதன் வீடியோகால் லிமிட் 32 நபர்கள்வரை பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த இரண்டு சேவைகளிலும் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியை வழங்குவதாக அறிவித்து உள்ளது. அதாவது இந்த இரண்டு சேவைகளும் இதற்கு முன்னர் ஒருவருடன் மட்டுமே வீடியோ கால்களை மேற்கொள்ள முடிவதாக இருந்தது.
அதாவது கூகுள் டுயோ மொபைல் செயலியில் க்ரூப் ஒன்றினை முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும், அதன்பின்னர் ஹப் மேக்சிடம், Hey Google, make a group call என்று சொன்னால், தானாக க்ரூப் கால் அழைப்பு அழைக்கப்படும்.